1. HOUSING LOAN / 2. MORTGAGE LOAN



    புதிய வீடு கட்ட / வீட்டை விரிவுபடுத்த கடன் மனுவுடன் இணைக்கப்பட வேண்டிய இணைப்புகள்



Smiley face


வீட்டு கடன் பெற தகுதியுடையோர் :

1. கடன் கோருபவர் பெயரில் அடிமனைக்கு உரிமை இருக்க வேண்டும்.


2. வீட்டு மனையாகவோ / புதியதாக கட்டிக் கொண்டிருக்கும் முழுமையாக முற்றுப்பெறாத வீடாகவோ இருக்கவேண்டும்.


3. வீடு கட்டப்படவுள்ள இடம், குடியிருப்பு பகுதியாக இருக்க வேண்டும்..


4. புதிய வீடு கட்ட ரூ1,00,000/-- கடனுக்கு ரூ4100/- மாத வருமானம் இருக்க வேண்டும்..


5. மனுதாரர் வருமானம் மற்றும் குடும்ப அங்கத்தினர் வருமானம் சேர்த்துக் கொள்ளப்படும்..


6. கடன் உச்ச வரம்பு புதிய வீடு கட்ட ரூ30,00,000/- விரிவாக்கத்திற்கு ரூ3,00,000/- மட்டும்..


7. தவணைக்காலம் 180 மாதங்கள் ( விடுப்பு காலம் உட்பட)


8. வட்டி விகிதம் 10.00%.


9. விடுப்பு காலம் 6 மாதம் வரை


இணைப்புகள்:

1. கடன் மனுவில் கடன் கோருபவர் புகைப்படம் ஒட்டி அதில் மேலாளர் கையொப்பம் இட வேண்டும்.


2. ஊதியம் பெறுவோராயின் சம்பளம் வழங்கும் அதிகாரியிடம் சம்பளம் அத்தாட்சி.


3. இதர வருமானம் இருப்பின் தாசில்தாரிடம் வருமானச்சான்று.


4. மனுதாரரின் வயது தொடர்பான வயது சான்று.


5. குடும்ப கார்டு நகல்.


6. கிளையின் விவகார எல்லைப்பகுதியில் உள்ள வீடு கட்டும் சங்கங்கள் / இதர வங்கிகள், தொடக்க கூட்டுறவு வங்கி ஆகியவற்றில்
இக்காரியத்திற்கு கடன் கோரவில்லை என்பதற்கான மனுதாரரின் உறுதி மொழி சான்று..


7. திட்ட மதிப்பீடு அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரிடம் பெற்று மனுதாரர் கையொப்பம் இடவேண்டும்..


8. கடன் பெறுவதற்கான, அங்கீகரிக்கப்பட்ட, கட்டப்படவுள்ள வீட்டின் வரைபடம் 2 நகல்கள்.


9. வீடு கட்டுவதற்கான பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி அனுமதி.


10. வீடு விரிவுபடுத்தும் காரியமாயின் திட்ட மதிப்பீடு, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் பஞ்சாயத்து அனுமதி..


ஈடுகாட்டும் சொத்திற்கு தர வேண்டிய ஆவணங்கள் :

1. அசல் பத்திரம்.


2. மூலப்பத்திரம்.


3. வில்லங்க சான்று 14/31 - ஆண்டுகளுக்கு.


4. அடிமனைக்கு - மனை வரி ரசீது - நடப்பு ஆண்டுக்கு.


5. சிட்டா, அடங்கல்.


6. பட்டா


7. நில அளவை பேரேட்டு நகல் (எப்.எம்.பி) ( வீடு கட்டவுள்ள இடத்தை மார்க் செய்து காண்பிக்க வேண்டும்)


7. (அ) நகர அளவை பேரேட்டு நகல் ( Town Survey Extract)


8. அரசு வழிகாட்டும் மதிப்பு ( சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற வேண்டும்)


9 . நிலம் / மனை பூர்வீகமாயின்


அ) 31 - வருடங்களுக்கு வில்லங்க சான்று


ஆ) 13- வருடங்களுக்கு முன்பு - யார் பெயரில் மனை இருந்தது என்பதற்கான சிட்டா நகல் / "அ" பதிவேடு நகல் - தாசில்தார் சான்றுடன்


இ) சிட்டா , அடங்கல்


ஈ) பட்டா


உ) நில அளவை பேரேட்டு நகல்


ஊ) வம்சா வழி சான்று


    MORTGAGE LOAN



    வீடு அடமான கடன் கடன் மனுவுடன் இணைக்கப்பட வேண்டிய இணைப்புகள்



Smiley face


அ) வீடு அடமான கடன் பெற தகுதிகள் :


1. ஈடுகாட்டும் சொத்து கட்டி முடிக்கப்பட்ட கட்டிடமாக இருத்தல் வேண்டும்


2. வீட்டின் உரிமையாளரின் பயன்பாட்டுக்கே கடன் வழங்கப்படும்.


3. ஒருவர் வீட்டினை அடமானம் வைத்து வேறு ஒருவருக்கு கடன் வழங்க இயலாது..


4. வங்கி அதிகாரியால் நிர்ணயம் செய்யும் வீட்டின் மதிப்பில் 60 % க்கு உட்பட்டு கடன் வழங்கப்படும்.


5. திருப்பி செலுத்தும் தகுதிக்கு ஏற்ப கடன் அனுமதிக்கப்படும்.


6. மனுதாரரின் மொத்த வருமானத்தில் 1/3 மடங்கு மட்டுமே திருப்பி செலுத்தும் சக்தியாக ( அசல் + வட்டி) எடுத்துக் கொள்ளப்படும்.


எடுத்துக்காட்டு


Particularsloan AmountInterest
கடன் கோரும் தொகை
ரூ100000
முதல் மாத தவணை
ரூ100000 / 120
ரூ 833/-
முதல் மாத வட்டி ( 31 நாட்களுக்கு)
ரூ 845/-
கூடுதல் தவணை
ரூ 1678/-


6.(i) மனுதாரரின் வருவாய் தகுதி 1678 X 3 = 5034 ( உத்தேசமாக ஒருவர் ரூ 1/- லட்சம் கடன் பெற வேண்டுமாயின் அவருக்கு மாதம் வருமானம் ரூ 5034 /- வர வேண்டும்).


6.(ii) மனுதாரரின் மாத வருவாயோடு அவரை சார்ந்துள்ள அவரது மனைவி / கணவன், மகள்கள், மகன் கள்
ஆகியோரது வருவாய்களையும் திருப்பி செலுத்தும் சக்திக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இவர்களை இணை மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்.


7. திருப்பி செலுத்தும் காலம் 120 மாதங்கள்.


8. வட்டி விகிதம் 10.25%.


9. கடன் வழங்கும் காரியங்கள் : அ) வியாபார அபிவிருத்தி ஆ) வீடு பழுது பார்த்தல் / புதுப்பித்தல்


10. மனுதாரருக்கு வயது 50-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


11. கடன் அளவு ரூ 20/- லட்சம் வரை.


இணைப்புகள் :


1. வீட்டின கிரையப்பத்திரம் ஒரிஜினல்.


2. மூலப்பத்திரம் ஒரிஜினல்.


3. வில்லங்க சான்று ( 14 ஆண்டுகளுக்கு).


4. நடப்பு ஆண்டுக்கு வீட்டு வரி ரசீது.


5. வீட்விற்கு பொறியாளரது விரிவான மதிப்பீடு


6. வீட்டின் வரைபடம்


7. வயது சான்றிதழ்


8. வருமான சான்றிதழ்


9. புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை நகல்


10. வீட்டின அடிமனைக்கு அரசு வழிகாட்டும் மதிப்பு ( கிளைமேலாளர் பெற வேண்டும்)


11. கடன் கோரும் காரியத்திற்கான சான்று


12. திட்ட அறிக்கை


13. வீட்டின் புகைப்படம்


14. டவுன் சர்வே ரெஜிஸ்டரி எக்ஸ்ட் ராக்ட் / சிட்டா அடங்கல் பட்டா


15. நில அளவை பேரேட்டு நகலில் ( (FMB) ஈடுகாட்டும் சொத்து அமைந்துள்ள இடத்தை மார்க் செய்து காட்டவேண்டும்.


16. மனையின் மதிப்பு குறித்து VAO -விடம் சான்று பெற வேண்டும்..


17. நிலம்/ மனை / வீடு பூர்வீகமாயின்.


அ) 31 - வருடங்களுக்கு வில்லங்க சான்று.


ஆ) 13- வருடங்களுக்கு முன்பு - யார் பெயரில் மனை இருந்தது என்பதற்கான சிட்டா நகல் / "அ" பதிவேடு நகல் - தாசில்தார் சான்றுடன் .


இ) சிட்டா , அடங்கல்.


ஈ) பட்டா .


உ) நில அளவை பேரேட்டு நகல்


ஊ) வம்சா வழி சான்று






Copy ©2016 www.tdccbank.in. All Rights Reserved.

Powered by Global Soft Solutions