மத்திய கால கடன் களுக்கு நபர் ஜாமீன் பேரில் 100000/- வரை அதற்கு மேல் சொத்து அடமானம்



Smiley face


வ.எண்
கடன்களின் வகைகள் தேவைப்படும் ஆவணங்கள் /
தகுதிகள்
தனிநபர் மற்றும் கடன்
உச்ச அளவு
திருப்பி
செலுத்தும்
காலம்
மான்ய விபரம் வட்டி விகிதம்
வங்கி
அளவில் /
சங்க அளவில்
%
1
கறவை மாடு
இரண்டு மாடுகள்,
மாடு ஒன்றுக்கு
ரூ45000/- வீதம்
சொந்தமான வீடு மற்றும் 1/2 ஏக்கர்
நிலம் இருக்க வேண்டும். வாங்கும்
கடனைப் போல் இரண்டு மடங்கு
சொத்து உடையவராக இருக்க வேண்டும். மற்றும் நிலம்
உடைய நபர் ஜாமின் நிற்க வேண்டும் கறவை
மாட்டின் பாலினை கொள்முதல் செய்ய பால் சங்க
தீர்மானம் வேண்டும்..
நபர் ஜாமின் பேரில் ரூ 100000/- 36 மாத சம தவணைகள் SC/ST உறுப்பினர்களுக்கு
33.33% உண்டு. மற்றவர்களுக்கு
25% மான்யம் ( பின் பயன் மான்யம்)
தற்போது இல்லை
10.50 - 12.75
2
சிறிய பால்பண்ணை 2 ஏக்கர் நிலம், நில அடமானம் திட்ட அறிக்கை மற்றும் விலைப்பட்டியல் 36 மாத சம தவணைகள் SC /ST உறுப்பினர்களுக்கு 33.33% மற்றவர்களுக்கு 25% ( பின் பயன் மான்யம்)
10.50 - 12.75
3
தானிய ஈட்டுக்கடன் தானிய மூட்டைகள் முன் கடன் பைசல் செய்ய ரூ 300000 ரொக்கமாக ரூ300000 1 வருடம் இல்லை
11.00 - 13.00
4
விவசாய கூட்டு பொறுப்புக்குழு ( JLG) சிறு மற்றும் குறு விவசாயி 10 நபர்கள் உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு குழு அமைக்க வேண்டும். மேலும் குத்தகை சாகுபடி செய்பவர்கள், கோவில் நிலம் பயிர் செய்பவர்கள் கூட்டுப் பொறுப்பு குழு அமைத்து கடன் கோரலாம். குழு உறுப்பினர் பயிர் செய்துள்ள நிலத்தின் அளவுக்கு தகுந்தார்போல் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் வாங்க மத்திய கால கடன் கள் அலகு விலைக்குட்பட்டு கடன் கோரும் காரியத்திற்கு தக்கவாறு
5.20 - 7.00
5
சுய உதவிக்குழு கடன் குழு தீர்மானம், குழுவின் வரவு-செலவு மற்றும் மத்திய காலக்கடனுக்குரிய ஆவணம், பகரான் செயலுரிமை ஆவணம், சேமிப்பின் அடிப்படையில் நான்கு மடங்கு அதிகப்பட்சம் ரூ500000/- 36 மாதங்கள்
10.50 - 12.75


விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கான மத்திய கால முதலீட்டு கடன் கள்



விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு நமது வங்கியின் கிளைகளில் மத்திய கால முதலீட்டு கடன் கள் நேரடியாக விவசாய உறுப்பினர்களுக்கு வங்கியின் நிபந்தனைகளுக்குட்பட்டு கடன் கள் வழங்கப்படுகிறது.



வழங்கப்படும் கடன்கள்



Smiley face

S.No Heading Point Particulars

1.

வழங்கப்படும் கடன்கள்

சிறுபால் பண்ணை அமைக்க

வெண் பன்றி வளர்ப்பு

கறிக்கோழி வளர்ப்பு

கதிர் அடிக்கும் இயந்திரம்

டிராக்டர் / உபகரணங்கள்

பவர்டில்லர்

போர்வெல் மற்றும் மின் மோட்டார்கள்

பயிர் நடவு செய்யும் இயந்திரம்

உயர் இன கறவை மாடுகள்

ஆடு / செம்மறி ஆடு வளர்ப்பு

மீன் பண்ணை அமைத்தல்

2.

கடன் தாரரின் தகுதிகள்

கடன் கோரும் நபர் கிளையில் இணை உறுப்பினராக இருக்க வேண்டும்.

கடன் கோரும் நபர் சம்மந்தப்பட்ட கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கவேண்டும்.

சம்மந்தப்பட்ட கிளையில் கடன் கோரும் நபர் ஜாமீன் தாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் தவணை தவறிய கடன் கள் நிலுவை இருக்கக் கூடாது

கறவை மாடுகள், செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வளர்ப்பு போன்ற காரியத்திற்கு மத்திய காலக் கடன் பெற கடன் கோரும் நபர்களுக்கு குறைந்தபட்சம் வீடு அல்லது 0.50 செண்ட் மேய்ச்சல் நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டும் அல்லது குத்தகை நிலமாக இருந்தால் கடன் கள் தவணை காலம் முடியும் வரை குத்தகை சான்று பெற வேண்டும்.

ஒரு நபர் ஒரு நபருக்கு மட்டுமே ஜாமீன் நிற்க வேண்டும்

ஜாமீன் தாரர் கடன் தாரருக்கு நெருங்கிய உறவினராக இருக்கக்கூடாது

கடன் தாரர் 18 முதல் 60 வயதுக்குள் இருக்கவேண்டும்.

கடன் கோருபவருக்கும் ஜாமீன் தாரருக்கும் கோரும் தொகையை போல் இருமடங்கு சொத்து மதிப்பு இருக்கவேண்டும்.

3.

கடன் அளவு விகிதம்

நபார்டு வங்கி. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய வங்கி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவசாயம் சார்ந்த கடனுக்கு குறிப்பிட்டுள்ள Unit Cost படி கடன் அனுமதிக்கப்படவேண்டும். பட்டியல் ஏற்கனவே கிளைகளுக்கு தொடர்புறுத்தப்பட்டுள்ளது.

ரூ1 லட்சம் வரையிலான கடன் கள் நபர் ஜாமீன் பேரிலும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கடன் களூக்கு கடன் தொகையை போல் இருமடங்கு சொத்து வங்கியின் பெயருக்கு அடமானம் செய்து கொடுக்க வேண்டும். அடமான சொத்து மதிப்பு அரசு வழிகாட்டு மதிப்பீட்டின் படி கணக்கிடப்படவேண்டும்.

ரூ1 லட்சத்திற்கு மேல் வழங்கப்படும் கடன் களூக்கு திட்ட மதிப்பீட்டில் 10% உறுப்பினர் சொந்த நிதியாக சேமிப்பு கணக்கில் பெற்று மொத்த தொகைக்கு சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு காசோலை வரைவோலை ஆர்டிஜிஎஸ் RTGS மற்றும் நெப்ட் NEFT மூலம் மட்டுமே வழங்கப்படவேண்டும்.

4.

கடன் பெற தேவையான ஆவணங்கள்

நபர் ஜாமீன் கடன்


கேஒய்சி KYC ஆவணங்கள்

கம்ப்யூட்டர் சிட்டா / பட்டா

கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும் அடங்கல்

நிலம் / வீட்டிற்கான வி ஏ ஓ V A O வின் சொத்து மதிப்பு சான்று

கிளைமேலாளர் நேரில் சென்று மதிப்பீட்டு அறிக்கை

புகைப்படம்

PACCS தொடக்கவேளாண்மை கோஆப்ரேடிவ் சொசைட்டி மற்றும் இதர வங்கிகளின் என் ஓ சி NOC

கறவை மாட்டுக்கான கடனாக இருப்பின் பால் கூட்டுறவு சங்க தீர்மானம்/ தனியார் துறை நிறுவனமாயின் அவர்களின் உறுதிமொழி கடிதம்

ஜாமீன் தாரருக்கு


கே ஒய் சி KYC ஆவணங்கள்

சிட்டா / பட்டா

அடங்கல்

புகைப்படம்

அடமான கடன்களுக்கு


1. உறுப்பினர் கடன் விண்ணப்பம்

2. ஆர் பி ஐ RBI நிர்ணயித்துள்ள முகவரி சான்று நகல்

3. அடமானம் செய்யும் சொத்து மனுதாரர் பெயரில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் வருவாய்த்துறை 10(1) சிட்டா அடங்கல், நில வரைபடம் சொத்து தொடர்பான கிரைய பத்திரம் கிணற்றுடன் கடன் தாரரின் புகைப்படம்

4. அடமான சொத்து வீடாக இருப்பின் கட்டிட வரைபடம் பொறியாளர் கட்டிட மதிப்பீடு வீட்டின் புகைப்படம்

5. நில வரி/ வீட்டு வரி முந்தைய வருடத்திற்கு அல்லது நடப்பு வருடத்திற்கு

6. அடமானம் செய்யும் சொத்திற்கு மூலப்பத்திரம் இருப்பின் 13 ஆண்டுகளுக்கும் மூலப்பத்திரம் இல்லையெனில் 30 ஆண்டுகளுக்கு வில்லங்கச்சான்று பெற்று வைக்க வேண்டும்.

7. கிளைமேலாளரின் சொத்து மதிப்பீட்டு அறிக்கை

8. அரசு வழிகாட்டும் மதிப்பு

9. PACCS & தொடக்கவேளாண்மை கூட்டுறவு சொசைட்டி & இதர வங்கிகளின் என் ஓ சி NOC

10. பட்டய கணக்காளரின் திட்ட மதிப்பீடு அறிக்கை

11. விண்ணப்பதாரரின் கடன் தகுதி நிர்ணய சான்று

12. விவசாயம் சார்ந்த மத்திய கால கடனுக்கு விலைப்புள்ளி அளிக்கும் நிறுவனம் ஜிஎஸ்டி GST எண்ணுடன் கொள்முதல் செய்யும் பொருள்களூக்கும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் என்பதற்கான சான்று

13. பொறியாளரின் மதிப்பீட்டு அறிக்கை

14. கடன் அனுமதிக்கப்படும் பொழுது கடன் காரியங்களுக்கு ஏற்ப கோரப்படும் ஆவணங்கள் பெற்று கடன் மனுவில் இணைக்கப்படவேண்டும்.

5.

கடன் பட்டுவாடா

1. கடன் கோரும் தொகையை எக்காரணம் கொண்டும் ரொக்கமாக வழங்கக்கூடாது. கால்நடைகளுக்கு சார்ந்த கொள்முதல் குழு 1) கிளைமேலாளர் 2) கால்நடை மருத்துவர் 3) விண்ணப்பதாரர் ஆகியோர் கொண்ட குழு மூலம் மட்டுமே வாங்க வேண்டும். இதற்கு நமது கிளையின் நடப்பு கணக்கு காசோலையின் மூலம் பட்டுவாடா செய்ய வேண்டும். இதர இனங்களுக்கு விலைப்புள்ளி வழங்கிய நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை, ஆர்டிஜிஎஸ் & நெப்ட் RTGS & NEFT மூலம் கடன் பட்டுவாடா செய்ய வேண்டும்.

2. கடன் மூலம் பெற்ற பொருட்கள் / கால் நடைகளுக்கு வழங்கிய தொகைக்குரிய அச்சு ரசீது மற்றும் பில்கள் பெற்று கடன் கோப்புடன் வைத்து பராமரிக்கவேண்டும்.

3.. கடன் கோரிய திட்டத்தின் தன்மையை பொறுத்து கடன் தொகை ஒரே தவணையாகவோ அல்லது திட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப அடுத்தடுத்த நிலைகளிலோ பட்டுவாடா செய்யப்படவேண்டும்.

4. தலைமையகத்தில் கடன் அனுமதி பெற்ற பின் கடன் பெறும் நபரிடம் கடன் தொகைக்கு தேவையான புரோநோட் மற்றும் இதர ஆவணங்கள் கிளை அளவில் பெற்று வைத்துக் கொள்ளவேண்டும்.

6.

பயன்பாட்டு சான்றிதழ்

அனைத்து வகையான மத்திய கால கடன் களில் சொத்துக்கள் உருவாக்கப்படும் போது கடன் தாரருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து பயன்பாட்டு சான்றிதழை கிளையில் கடன் கோப்பில் வைக்கப்படவேண்டும்

கடன் கோரிய காரியத்திற்குரிய பொருள்கள் முழுமையாக கொள்முதல் செய்யப்பட்டு சொத்துக்கள் உருவாக்கப்பட வேண்டும்.ல் உருவாக்கப்படும் சொத்துக்கள் நல்ல முறையில் உள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

7.

மானியம்

மானியத்துடன் கோரும் கடன் களுக்கு தொடர்புடைய துறை அனுமதி செய்த மானிய விடுப்பு கடிதம் பெற்று கடன் கோப்பில் இணைக்கப்படவேண்டும்,

பின்னேற்பு மானியமாக இருந்தால் ( BACK END SUBSIDY ) கடன் தொகை திட்ட மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டு முழு தொகையும் கடனாக அனுமதி செய்து வழங்கப்படும். பின்னேற்பு மானியம் தொடர்பான கடன் களில் மானியம்பெறப்படும். வரை வழங்கப்பட்ட மொத்தக்கடன் தொகைக்கு கேட்பு எழுதப்படவேண்டும். மானியத் தொகை பெறப்பட்ட பின்பு அத்தொகை கடன் தொகைக்கு வரவு வைக்கப்பட்டு மீதமிருக்கும் கடன் தொகைக்கு கடன் காலம் முழுமைக்கான புதிய கேட்பு எழுதப்பட்டு கடன் தாரருக்கு வழங்கப்படவேண்டும்.

பின்னேற்பு மானியம் வழங்கும் துறையின் அங்கீகாரம் பெற்ற அலுவலரிடமிருந்து " பெறப்பட்ட பயனாளிகள் மானியம் பயனாளி கடன் பெற்ற வங்கி கிளைக்கே விடுவிக்கப்படும்" என்ற உறுதிமொழி கடிதம் பெற்று சம்மந்தப்பட்ட கிளையில் கடன் மனுவுடன் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

8.

கடன் முன் கூட்டி முடிவு கட்டுதல்

1. கடன் முழுவதும் நேர் செய்யப்படும் வரை கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களை விற்பனைசெய்யக்கூடாது க் கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் /கால்நடைகள் உள்ளதை மூன்று மாதத்திற்கு ஒருமுறை சரிபார்த்து பதிவேடு பராமரிக்க வேண்டும். கடன் முடியும் வரை கடன் மூலம் பெற்ற பொருட்கள் / கால் நடைகள் இல்லாதிருக்கும் பட்சத்தில் கடன் தொகை முழுவதையும் முன்முடிவு கட்டி சட்டப்பூர்வ வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

2. கடன் தவணை தவறியும் திரும்பி செலுத்தப்படாத நிகழ்விலும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வசூலிக்கப்படவேண்டும்.

3. பின்னேற்பு மானியம் வழங்கும் காரியத்திற்கு வழங்கப்படும் கடன் அந்த மானியம் வழங்கப்படும் துறை நிர்ணயம் செய்துள்ள நிபந்தனைகள் மற்றும் வரையறைக்குட்பட்டு கடன் அனுமதிக்கப்படுவதால் கடன் தாரரின் மானியம் வழங்கும் துறை நிர்ணயம் செய்துள்ள நிபந்தனைகள் மற்றும் வரையறைகளை மீறும் பட்சத்தில் கடன் தொகை முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாக கருதி கடன் தொகை முழுவதையும் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வசூலிக்கப்படவேண்டும்.

9.

காப்பீடு

கடன் மூலம் பெறப்பட்ட பொருட்கள் / கால்நடைகள் கடன் தீரும் காலம் முழுமைக்கும் காப்பீடு செய்யப்படவேண்டும். காப்பீடு நகல் ஒன்று கடன் கோப்பில் வைத்து கிளைகளில் பராமரிக்கவேண்டும்.

10.

அபராத வட்டி

கடன் கள் தவணை காலத்தில் செலுத்த தவறினால் நிர்ணயித்த வட்டியுடன் சேர்த்து தவணை தவறிய தொகைக்கு அபராத வட்டி வசூலிக்கப்படவேண்டும்.

11.

தவணை தவறிய கடன் கள் மீது நடவடிக்கை

தவணை தவறிய கடன் கள் மூது 15 நாட்களுக்கு மேற்பட்ட கடனுக்கு பதிவு தபாலும் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கடன் கள் மீது தாவா நடவடிக்கை எடுக்கப்பட்டும்,தீர்ப்பாணை பெற்று 2 மாதங்களுக்கு மேற்பட்ட கடன் கள் நிறைவேற்று நடவடிக்கை அனுப்பப்படும் இருக்கவேண்டும்.

டிராக்டர் மற்றும் உபகரணங்கள் எனில், கடன் மூலம் கொள்முதல் செய்யும் டிராக்டர் மற்றும் உபகரணங்களை போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யும் , வங்கியின் பெயருக்கு Hypothication பதிவு செய்தும், பதிவு செய்யப்பட்ட விபரம் அடங்கிய R C ஆர்.சி புத்தகம், ஓட்டுநர் உரிமம், காப்பீடு பத்திரம் ஆகியவற்றின் அசல் மற்றும் வாகனத்தின் ஒரு தொகுப்பு சாவிகளை வங்கியில் ஒப்படைக்கவேண்டும்.



Smiley face



Smiley face






Copy ©2016 www.tdccbank.in. All Rights Reserved.

Powered by Global Soft Solutions