KNOW YOUR CUSTOMER (KYC) - WHAT IS KYC ? WHAT DOCUMENTS ARE REQUIRED?

Please submit your Aadhaar Card Number, PAN Number, Mobile Number and Email Id - for Most urgent

KYC is an acronym for Know your Customer, a term used for customer identification process. It involves making reasonable efforts to determine true identity and beneficial ownership of accounts, source of funds, the nature of customers business, reasonableness of operations in the account in relation to the customers business, etc which in turn helps the banks to manage their risks prudently. The objective of the KYC guidelines is to prevent banks being used, intentionally or unintentionally by criminal elements for money laundering. KYC has two components Identity and Address. While identity remains the same, the address may change and hence the banks are required to periodically update their records.

KYC Norms content source from RBI

View

உங்கள் வாடிக்கையாளரை அறிதல் (KYC) என்றால் என்ன?
KYC என்பது KNOW YOUR CUSTOMER என்பதன் சுருக்கமாகும். KYC என்றால் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள். அதாவது ஒரு வாடிக்கையாளரை அடையாளம் கண்டு கொள்ளும் நடவடிக்கையாகும். இதன்படி நியாயமான முயற்சிகளின் மூலம், வங்கிக் கணக்கில் கணக்குதாரருக்குள்ள உரிமை, கணக்கிற்கு நிதி வரும் வழி, வாடிக்கையாளர் செய்யும் வர்த்தகத்தின் தன்மை, வாடிக்கையாளரின் வர்த்தகம் தொடர்பாக கணக்கைக் கையாளும் செயல்பாடுகளில் உள்ள நியாயத்தன்மை ஆகியன அறிந்து கொள்ளப்படுகிறது. இதன்படி வங்கிகள் தங்களது இடர்வரவை விவேகமான முறையில் நிர்வகித்துக் கொள்ளலாம். KYC வழிக்காட்டு நெறிமுறைகளின் நோக்கம் என்னவென்றால் தெரிந்தோ, தெரியாமலோ குற்றவாளிகள் வங்கிகளை கருப்புப்பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தக் கூடாது. KYC இரண்டு பகுதிகளைக் கொண்டது. அடையாளம் மற்றும் முகவரி. அடையாளம் அப்படியே இருக்கும். ஆனால் முகவரி என்பது மாறக்கூடியது. எனவே வங்கிகள் அவ்வப்போது தங்கள் பதிவேடுகளில் முகவரி மாற்றங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்
Yes. Reserve Bank of India has issued guidelines to banks under Section 35A of the Banking Regulation Act, 1949 and Rule 7 of Prevention of Money-Laundering (Maintenance of Records of the Nature and Value of Transactions, the Procedure and Manner of Maintaining and Time for Furnishing Information and Verification and Maintenance of Records of the Identity of the Clients of the Banking Companies, Financial Institutions and Intermediaries) Rules, 2005. Any contravention thereof or non-compliance shall attract penalties under Banking Regulation Act.

வாடிக்கையாளர்களின் அடையாளத்தை சரிபார்க்க ஏதேனும் சட்டபூர்வ ஆதரவு உண்டா?

ஆம். ரிசர்வ் வங்கியின் வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 பிரிவு 35A ந் கீழ் மற்றும் கருப்புப் பண தடுப்பு ( பரிவர்த்தனைகளின் தன்மை மற்றும் மதிப்பு ஆகியவற்றை பதிவேடுகளில் பராமரிப்பது, வங்கிகள், நிதியியல் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரின் அடையாளங்களை பராமரிப்பது மற்றும் சரிபார்ப்பது) 2005 விதிகளில் விதி எண் 7ந் படி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. வங்க்கி ஒழுங்குமுறை சட்டத்தின்படி மேற்சொன்ன விதிகளை கடைபிடிக்காவிட்டாலோ, மீறினாலோ தண்டனைகள் விதிக்கப்படும்.
Yes. KYC is applicable to customers of the bank. For the purpose of KYC following are the Customers of the bank.a person or entity that maintains an account and/or has a business relationship with the bank;one on whose behalf the account is maintained (i.e. the beneficial owner);beneficiaries of transactions conducted by professional intermediaries, such as Stock Brokers, Chartered Accountants, Solicitors etc. as permitted under the law, and any person or entity connected with a financial transaction which can pose significant reputational or other risks to the bank, say, a wire transfer or issue of a high value demand draft as a single transaction.

வங்கியியல் நிரந்தர வைப்பு வைத்திட விரும்புகிறேன். எனக்கும் KYC பொருந்திடுமா?

ஆம். KYC வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். KYC நோக்கத்திற்காக கீழ்க்கண்டவர்கள் வாடிக்கையாளர்களாக கருதப்படுவார்கள்.
  1. ஒரு நபர் அல்லது அமைப்பு வங்கியிடம் கணக்கு அல்லது வர்த்தக தொடர்பு பராமரிப்பதால்
  2. ஒருவரின் சார்பாக கணக்கு பராமரிக்கப்படுதல் ( பயன் பெறும் உரிமையாளர்)
  3. சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட தொழில்முறை இடையீட்டாளர்கள் அதாவது பங்குதரகர்கள், பட்டயக் கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளின் பயனாளிகள்
  4. ஒரு தனி பரிவர்த்தனையில் உயர் மதிப்பு கொண்ட கேட்பு வரைவோலையை வெளியிடுதல் அல்லது உடனடி பணபரிமாற்றம் போன்று குறிப்பிடத்தக்க, வங்கிக்கு இடர்வரவு இருக்கலாம் என்று எண்ணக்கூடிய பரிவர்த்தனை
Customer identification means identifying the customer and verifying his/her identity by using reliable, independent source documents, data or information. Banks have been advised to lay down Customer Identification Procedure to be carried out at different stages i.e. while establishing a banking relationship; carrying out a financial transaction or when the bank has a doubt about the authenticity/veracity or the adequacy of the previously obtained customer identification data.

வாடிக்கையாளரை அடையாளங்காண ஏதேனும் நடைமுறை குறிப்பிடப்பட்டுள்ளதா?

வாடிக்கையாளரை அடையாளங்காணவும், அதனை சரிபார்த்திடவும் நம்பத்தகுந்த எதையும் சார்ந்திராத வழிகளிலிருந்து ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மூலம், வங்கிகள் செயல்படுத்தும் வெவ்வேறு கட்டங்களில் வாடிக்கையாளரை அடையாளங்காணும் நடைமுறையை வைத்திடுமாறு வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன. இதற்கு முன்பு பெறப்பட்ட வாடிக்கையாளர் அடையாள விவரங்களின் உண்மையில் ஐயம் இருந்தால் அல்லது ஒரு நிதியியல் பரிவர்த்தனையை நிகழ்த்தும் போது அல்லது வங்கியுடன் தொடர்பு ஏற்படுத்தும்போது மேற்சொன்னவற்றை கடைபிடிக்கப்படும்.
Yes. To ensure that the latest details about the customer are available, banks have been advised to periodically update the customer identification data based upon the risk category of the customers. Banks create a customer profile based on details about the customer like social/financial status, nature of business activity, information about his clients business and their location, the purpose and reason for opening the account, the expected origin of the funds to be used within the relationship and details of occupation/employment, sources of wealth or income, expected monthly remittance, expected monthly withdrawals etc. When the transactions in the account are observed not consistent with the profile, bank may ask for any additional details / documents as required. This is just to confirm that the account is not being used for any Money Laundering/Terrorist/Criminal activities.

வங்கியில் கணக்கை தொடங்கும்பொழுது KYC தேவைகளை பூர்த்தி செய்து தந்த பிறகு, மீண்டும் வங்கி என்னிடம் KYC தேவை பூர்த்தி செய்ய கேட்கலாமா?

ஆம். வாடிக்கையாளரின் முகவரி, தொலைபேசி போன்ற விவரங்கள் மாறக்கூடும். எனவே அவ்வப்போது வாடிக்கையாளர் விவரங்களை வங்கிகள் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். வாடிக்கையாளரின் தன் மையைப் பொறுத்து இதன் கால இடைவெளி வேறுபடும்.
வங்கிகள் வாடிக்கையாளரின் சமூக / நிதியியல் அந்தஸ்து, வர்த்தகத்தின் தன்மை, வாடிக்கையாளரின் வர்த்தகம் பற்றிய தகவல் மற்றும் அதன் இடம், வங்கியில் கணக்கைத் திறப்பதன் நோக்கமும், காரணமும், வங்கியில் வைப்பாக போடப்படும் பணம் வந்த வழி, எதற்காக அந்த பணம் பயன்படுத்தப்படும் ஆகியவை பற்றிய விவரங்கள் கேட்கப்படும். பணி பற்றிய மாதந்தோறும் எவ்வளவு பணம் வங்கிக்கணக்கிற்குள் வரும், மாதந்தோறும் எவ்வளவு பணம் எடுக்கப்படுகிறது போன்ற விவரங்களையும் வங்கிகள் வைத்திருக்கும். சில சமயங்களில் வங்கி வைத்த விவரங்களிலிருந்து வாடிக்கையாளரின் பரிவர்த்தனைகளில் மாற்றங்கள் தென்பட்டால், வங்கிகள் சில கூடுதல் விவரங்கள்/ஆவணங்களை கேட்கலாம். இது எதற்காக என்றால் வங்கியில் உள்ள பணம் தவறான / தீவிரவாத / குற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படக் கூடாது என்பதற்காகதான்.
There are two aspects of Customer Identification. One is establishing identity and the other is establishing present residential address. For establishing identity, the bank requires any authentic document carrying photo of the customer such as driving licence/ passport/ pan card/ voters card etc. Though these documents carry the residential address of the customer, it may not be the present address. Therefore, in order to establish the present address of the customer, in addition to passport/ driving licence / voters card / pan card, the bank may ask for utility bills such as Telephone / Electricity bill etc.

என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை அடையாள சான்றாக கொடுத்தபின்பும், வங்கி தொலைபேசி/மின் கட்டணம் கட்டிய சீட்டை கேட்கிறது?

வாடிக்கையாளரை அடையாளம் காணுவதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று அடையாளத்தை ஏற்றுக்கொள்வது மற்றொரு அம்சம் அப்போதுள்ள குடியிருக்கும் முகவரியை தெரிந்துகொள்வது. அடையாளத்தை ஏற்றுக்கொள்வது என்பது, வாடிக்கையாளரின் புகைப்படத்தைக் கொண்ட ஓட்டுநர் உரிமம்/கடவு சீட்டு/வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டை/வாக்காளர் அட்டை போன்ற உறுதியான ஆவணங்கள் வங்கிக்கு தேவைப்படுகிறது. இந்த ஆவணங்கள் குடியிருப்பு முகவரியைக் கொண்டிருந்தாலும், பல சமயங்களில் அவை தற்போதைய முகவரியாக இருப்பதில்லை. எனவே வாடிக்கையாளரின் தற்போதைய முகவரியை அறிந்திட ஓட்டுநர் உரிமம் / கடவுச்சீட்டு / வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை/ வாக்காளர் அட்டை இவைகளுடன் தொலைபேசி/மின் கட்டணம் கட்டிய சீட்டு போன்றவைகளை வங்கி கேட்கிறது.

The detailed list of the documents that the bank

View

துவங்க முடியும். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் வீட்டு உபயோகத்திற்காக செலுத்திய சில கட்டண ரசீதுகள். வங்கி கணக்கை துவங்க நினைக்கும் நபரின் பெயரில் இல்லாதிருப்பது சகஜம்தான். ( நெருங்கிய உறவுகள் (உ.ம்) மனைவி, மகன், மகள், பெற்றோர்) வங்கி கணக்கை துவக்க முற்படுபவரின் அடையாள ஆவணம் மற்றும் அவருடன் வாழும் நெருங்கிய உறவினர் வீட்டு உபயோகத்திற்காக செலுத்திய கட்டண ரசீதும் வேண்டும். இதோடு அந்த நெருங்கிய உறவினர் கணக்குத் துவங்குபவர் தன்னோடு வசிப்பதாக ஒரு ஒப்புதல் கடிதம் கொடுக்க வேண்டும். கூடுதல் சான்றாக, வங்கி இந்த கடிதத்தை தபால் மூலம் கேட்கலாம்.
தனக்கென்று அடையாள மற்றும் முகவரி ஆவணங்கள் இல்லாத, குறைந்த வருவாய் பிரிவை சார்ந்த வாடிக்கையாளர் வங்கியில் கணக்குத் துவங்கமுடியும். KYC நடைமுறைகளை பூர்த்தி செய்த ஒருவர் அளிக்கும் அறிமுகத்தின் மூலம் கணக்கு துவங்கலாம். கணக்கு துவங்குபவரின் கணக்கில் இருப்புத் தொகையாக ஓராண்டில் ரூ50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) மொத்த கடன் தொகை ரூ1,00,000/-(ரூபாய் ஒரு லட்சம்) இவற்றிக்கு மேல் இருக்கக் கூடாது அறிமுகப்படுத்துபவரின் வங்கி கணக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முந்தையதாகவும் திருப்திகரமான பரிவர்த்தனைகளைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும். வாடிக்கையாளரின் புகைப்படம் மற்றும் அவரது முகவரி ஆகியவை அறிமுகப்படுத்துபவரால் ஒப்புதல் அல்லது வாடிக்கையாளரின் அடையாள மற்றும் முகவரி பற்றி வேறு சான்றுகள் இருந்தால் அவை வங்கியின் திருப்திக்கேற்றவாறு இருக்கவேண்டும். ஏதோ ஒரு சமயத்தில் அவன்/அவளது வங்கிக்கணக்கில் ( ஒட்டு மொத்தமாக) நிலுவையில் உள்ள தொகை ரூபாய் ஐம்பதாயிரத்தைத் (ரூ50,000) தாண்டினாலோ அல்லது கணக்கில் மொத்தக்கடன் தொகை ரூபாய் ஒரு லட்சத்தை (ரூ1,00,000) தாண்டினாலோ மேற்கொண்டு எந்த பரிவர்த்தனையையும் அனுமதிக்கமுடியாது. KYC நடைமுறைகளை முழுமையாக பூர்த்தி செய்த பிறகே தொடர்ந்து பரிவர்த்தனைகளை அனுமதிக்கமுடியும். வாடிக்கையாளருக்கு ஏற்படும் சங்கடத்தை தவிர்க்க வங்கி, வாடிக்கையாளரின் கணக்கில் ஓராண்டில் இருப்பு ரூ 40,000(ரூபாய் நாற்பதாயிரத்தை) தாண்டும்பொழுதும் அல்லது மொத்த கடன் தொகை ரூ80,000 ( ரூபாய் எண்பதாயிரத்தை) தாண்டும் பொழுதும் KYC நடைமுறைகளை பூர்த்தி செய்யாவிடில், கணக்கில் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும்.
அத்தகைய சான்றிதழ்களில் கையெழுத்திடும் நபர், அதற்குரிய அதிகாரம் படைத்தவரா என்பதில் திருப்தி அடையும் பட்சத்தில், புகழ் பெற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வரும் சான்றிதழ்களை வங்கிகள் ஏற்க தயாராக உள்ளன. எனினும் வங்கிகள் இது தவிர கடவுசீட்டு, ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது KYC நோக்கங்களுக்கான இதர ரசீதுகள் போன்றவை நிறுவனங்களில் மற்றும் இதர அமைப்புகளில் சம்பளம் வாங்கும் ஊழியர்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படும்.
ஆம். வங்கிக்கணக்கை திறக்கும்பொழுது வாடிக்கையாளர் அளிக்கும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இது போன்ற நோக்கத்திற்காவோ அல்லது ஏதேனும் நோக்கத்திற்காகவோ வெளியிடப்பட மாட்டாது.
ஆம். கடன் அட்டைகள் / பற்று அட்டைகள் / ஸ்மார்ட் அட்டைகள் மட்டுமின்றி அதன் இணைப்பு/கூடுதல் அட்டைகளுக்கும் KYC நடைமுறைகள் பொருந்தும்.
கேட்கப்பட்ட விவரங்களை தர வாடிக்கையாளர் மறுத்தாலோ அல்லது ஒத்துழைக்கத் தயங்கினாலோ, இதனால் KYC நடைமுறைகளை செயல்படுத்த முடியாத சூழ்நிலை வங்கிக்கு வரும்பொழுது, அத்தகைய வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கையும் வர்த்தக உறவையும் வங்கி துண்டித்துவிடும்.

Services