சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனக்கடன் MSM E கடன்
    Micro Small Medium Enterprises Loan

கடன் வகை
கடன் நோக்கம் அதிகபட்ச
கடன் அளவு
வட்டி விகிதம் தவணை காலம்
M S M E கடன் சிறு குறு மற்றும் நடுத்தர
தொழில் நிறுவன கடன்
தனிநபர்கள், சிறுதொழில் செய்வோர், கம்பெனிகள் மற்றும்
கூட்டுக் குழுக்களுக்கு தொழிற்கூடம் கட்டுதல்
இயந்திரங்கள் , துணைக்கருவிகள் வாங்குதல்
மற்றும் தொழிலை இயக்க முன்னதாக ஏற்படும்
செலவுகளுக்காக அடமானத்தின் பேரில்
வழங்கப்படுகிறது
ரூ.20.00 லட்சம் வரை
10.45%
120 மாதங்கள்குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கடன் - வங்கியின் கிளைகள் மூலம் கடன் கள் வழங்குதல்1. கடன் பெற தகுதியுள்ளவர்கள் :

தனிநபர்கள், சிறுதொழில் உரிமையாளர்கள், உரிமையாளர் / பங்குதாரர்கள், நிறுவனங்கள் கம்பெனிகள் மற்றும் கூட்டுக்குழுக்கள்.

2. கடன் வழங்கும் காரியம் :

தொழிற்கூடம் கட்டுதல்

இயந்திரங்கள் மற்றும் துணைக்கருவிகள் கொள்முதல் செய்ய
கருவிகள் மற்றும் துணைக்கருவிகள் கொள்முதல் செய்ய ஆரம்ப மற்றும் தொழிலை இயக்க முன்னதாக ஏற்படும் செலவுகள்
ஒரு சுற்று இயக்கத்திற்கு கடன்
ஒரு சுற்று இயக்கத்திற்கு தேவையான நடைமுறை மூலதனத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கடன்3. தொழில் பதிவு :


கடன் கோரும் தனிநபர் / நிறுவனம் மாவட்ட தொழில் மையம் காதி கிராம தொழில் வாரியம் ஆகியவற்றில் தொழில் துவங்குவதற்கான பதிவு சான்று பெற்றிருக்கவேண்டும்.
தொழிலை துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் தேவையான மின் இணைப்பு, பஞ்சாயத்து/நகராட்சி உரிமம், மாவட்ட தொழில்மைய சான்று பெற்றிருக்க வேண்டும்.
கடன் பெறும் நிறுவனம் பங்குதாரர் நிறுவனமான இருப்பின் வருமான வரித்துறையின் மூலமும், கம்பெனிகளாக இருப்பின் 1956ம் வருடத்திய இந்திய கம்பெனிகள் சட்டத்தின் கீழும் பதிவு செய்திருக்க வேண்டும்.

4. கடன் அளவு :


இக்கடனுக்கான உச்ச அளவு ரூ.20.00 லட்சம் வரை ஆகும். .

5. வட்டி விகிதம் :


இக்கடன் 10.50% வட்டி விகிதம் அல்லது வங்கியால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம் பொருந்தும்.

6. திரும்பி செலுத்தும் காலம் :


இக்கடனின் வாய்தா காலம் 10 வருடம் ஆகும். 12 மாதங்கள் சலுகை காலமாக அனுமதிக்கப்படுகிறது. சலுகை காலத்தில் மாத இறுதியில் நிலுவையிலிருக்கும் கடன் தொகைக்கு பிரதி மாதம் வட்டி வசூலிக்கவேண்டும்.

7. ஆதாரம் :


வங்கியால் அனுமதிக்கப்படும் கடன் தொகையை போல் 2 மடங்கு மதிப்பிற்கு அசையா சொத்துக்களின் அடமானத்தின் பேரில் கடன் கள் வழங்கப்படும்.
கடனின் மூலம் வாங்கும் இயந்திர சாதனங்கள், கருவிகள்,உதிரிபாகங்கள், கச்சாபொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் முதலியவற்றை அடமான பத்திரத்தின் மூலம் வங்கிக்கு ஈடுகட்டவேண்டும். இவைகள் தவிர வங்கி நிர்ணயிக்கும் விகிதத்தில் கூடுதல் ஆதாரம் பெற வங்கிக்கு உரிமை உண்டு.

8. விரிவான நிதினிலை அறிக்கை


9. கடன் அனுமதி


இக்கடன் முதலீட்டு கடனாகவோ அல்லது முதலீட்டுக் கடன் மற்றும் ஒரு சுற்று இயக்கத்திற்கு தேவையான நடைமுறை மூலதனம் ஆகிய இரண்டுக்கும் சேர்ந்து ஒருங்கிணைந்த கடனாகவோ அனுமதிக்கப்படும்.

சொந்த நிதி ( விளிம்பு)

1
ரூ.10.00 லட்சம் வரை
10%
2
ரூ.10.00 லட்சத்திற்கு மேல் ரூ20.00 லட்சம் வரை உறுப்பினர் சொந்த நிதியாக இருக்கவேண்டும்
20%

10. விலைப்பட்டியல் :


கடனின் மூலம் வாங்கும் இயந்திர சாதனங்கள் புதியதாக இருக்கவேண்டும். இதற்கான விலைப்பட்டியலை கடன் கோருபவர் கையொப்பத்துடன் கடன் மனுவில் இணைக்கப்படவேண்டும்.Copy ©2016 www.tdccbank.in. All Rights Reserved.

Powered by Global Soft Solutions