அரசு நல திட்ட கடன் உதவி பெறுவதற்கான வங்கி விதிமுறைகள்

    NHFDC மாற்று திறனாளிகள் நலத்திட்டக் கடன்

1. கடன் பெற தகுதியுடையோர் :

# மாற்று திறனாளிகள் ( குறைந்தபட்சம் 40% ஊனம் உடையவர்)


2. வயது வரம்பு :

# குறைந்தபட்சம் 18
# மனவளர்ச்சி குன்றியோர்க்கு -14
# அதிக பட்சம் இல்லை


3. குடும்ப ஆண்டு வருமானம் :

# கிராமபுறமாயின் - ரூ 3.00லட்சம் /-
# நகர்புறமயின் - ரூ 5.00- லட்சத்திற்குட்பட்டு


4. கடன் உதவி வழங்கப்படும் தொழில்கள் :

# வணிக மற்றும் சேவைத் துறையில் சிறுதொழில்
# வேளாண் / வேளாண் சாராக் காரியங்களுக்காக
# வாடகை நோக்கத்திற்கு வாகனம் வாங்க
# சிறு தொழில்நுட்ப கல்வி / பயிற்சி பெற கல்விக்கடன்
# இளம் தொழில் வல்லுநர்களுக்கான கடன்


5. கடன் தொகை :

மாற்றுத் திறனாளிகளின் சுய தொழில் வருவாய் ஈட்டும் நோக்கத்திற்கு ரூ25,000/- முதல் ரூ50,000/- வரை நபர் ஜாமீன் பேரிலும் ரூ50,000/- மேல் ரூ50.00 லட்சம் வரை சொத்து அடமானத்தின் பேரிலும் 3 முதல் 5 வருட தவனை காலத்தில் 4% முதல் 9% வர வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.


6. ஜாமீன் விபரம் :

# கடன் தொகை ரூ 25,000/- வரை ஒரு நபர் ஜாமீன்
# கடன் தொகை ரூ 50,000/- வரை இரு நபர் ஜாமீன்
# ரூ 50,000/- க்கு மேல் சொத்து அடமானத்தின் பேரில்
( ஜாமீன் தாரர்கள் அரசு / பொதுத்துறை / தன்னிறைவு பெற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தவணை தவறாமல் திருப்பி செலுத்தும் செயல் உறுப்பினர் / வங்க்கியின் சார்ந்த கிளையின் இணை உறுப்பினரான வைப்புதாரர்களாக இருத்தல் வேண்டும்.)


7. விளிம்பு தொகை :

# 5 % முதல் 15% வரை


8. வட்டி விகிதம் :

4% to 9%


9. தேவையான ஆவணங்கள் :

# மாவட்ட மறுவாழ்வு மையத்திலிருந்து பெறப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் (சான்றொப்பம் இடப்பட்டது) 2 நகல்கள்
# வருமான சான்று
# வயது சான்று
# ஜாதி சான்று
# மனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 2 (ஒன்று மனுவிலும், மற்றொன்று தனித்தாளில் ஒட்டி விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்)
# புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று நகல் ( KYC நடைமுறையின்படி)
# ஆதார் அடையாள அட்டை
# கடன் கோருபவர் மாற்றுத்திறனாளிகள் கடன் திட்டத்தின் கீழ் இதே நோக்கத்திற்காக வேறு
எவ்வகையிலும் கடன் பெறவில்லை என்ற தன்னிலை உறுதி மொழி பத்திரம் # விலைப்புள்ளி
# கடனுக்கு பொறுப்பேற்பவர்களிடமிருந்து(ஜாமீன் தாரர்கள்) ரூ 100/- க்கான முத்திரை
தாளில் நோட்டரி பப்ளிக் சான்றுடன் கூடிய ஈட்டுறுதி பத்திரம்
# சொத்து அடமானமாயின் தேவைப்படும் கூடுதல் ஆவணங்கள்.Copy ©2016 www.tdccbank.in. All Rights Reserved.

Powered by Global Soft Solutions