Mobile0


பள்ளி மாணவ மாணவியரிடையே சிறு வயதிலிருந்தே சிறுசேமிப்பின் அவசியத்தை ஊக்குவிக்கும் வகையில் வங்கியின் கிளைகளில் பள்ளி குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு கணக்குத் திட்டம் ( SSS - Students Small Savings Scheme) என்று நமது வங்கியில் புதியதாக ஒரு சேமிப்பு கணக்கு திட்டம் ( New SB Product) துவங்கப்படவுள்ளது.


1. 10 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியரின் பெயரிலேயே கணக்குகள் துவங்கப்படவேண்டும். மாணவ, மாணவிகளே இத்திட்டத்தில் வரவு செலவு செய்து கொள்ளலாம்

2. K Y C ஆவணமாக ஆதார்டு கார்டு மட்டுமே பெறப்பட வேண்டும். மேலும் ஆதார் காட்டு இல்லாமல் கணக்கு துவங்கப்பட கூடாது. கூடுதலாக பள்ளி அடையாள அட்டை அல்லது Bonafide Certificate பெறப்படவேண்டும்.


3. கணக்கு துவங்குவதற்கு 2 புகைப்படம் பெறப்படவேண்டும்.


4. கணக்கு துவங்கும் போது முதல் முகவரியாக பள்ளி முகவரியும், 2ம் முகவரியாக வீட்டு முகவரியும் பெறப்படவேண்டும்.BR>
5. Form 60 பெறப்படவேண்டும்

6. Zero Balance நிலுவையில் கணக்கு துவங்கப்பட வேண்டும்.

7. இக்கணக்கில் ரூ.10/- முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம்.

8. இக்கணக்குகளுக்கு வட்டி விகிதம் மாணவன் - 5.0% மாணவி - 5.10%

( 18 வயது பூர்த்தியாகும் வரையில் மட்டுமே, 18 வயது நிறைவடைந்தவுடன் சாதாரண சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்பட வேண்டும். அதற்கும் நடைமுறைகள் மற்றும் P A N உள்ளிட்டவை பெறப்படவேண்டும்.)

9. Nomination வசதி கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

10. SSS சேமிப்பு திட்டத்தின் கீழ் தாய்க்கு முன்னுரிமை கொடுத்து பாதுகாவலரை (Guardian) செய்யப்படவேண்டும். பாதுகாவலராக நியமனம் செய்யப்பட்ட நபருடன் மாணவ / மாணவியர் நேரில் வந்து தொகை பெறவேண்டும். இருப்பினும் தொகை செலுத்த பாதுகாவலர் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

11. மேற்கண்ட பெயரில் துவங்கப்பட்ட கணக்குகளுக்கு காசோலை (Cheque) , ATM Card, Mobile Banking, Internet Banking மற்றும் வங்கியின் கூடுதல் வசதிகள் ஏதும் கிடையாது.






Copy©2016 www.tdccbank.in. All Rights Reserved.

Powered by GSS